jaga flash news

Sunday 16 December 2012

கிரக சேர்க்கை பலன்


 கிரக சேர்க்கை பலன்


ஐந்தாவது இடத்தில் செவ்வாய், சனி சேர்ந்திருந்தால்?
ஜோதிட சாஸ்திரப்படி ஐந்தாம் இடம் என்பது பூர்வ புண்ணிய ஸ்தானமாக பார்க்கப்படுகிறது. எனவே, அங்கு செவ்வாய், சனி சேர்க்கை நடைபெறாமல் இருப்பது நல்லது.
5இல் செவ்வாய் இருப்பதை பழங்கால ஜோதிட நூல்கள் அவ்வளவு சிறப்பாக குறிப்பிடவில்லை. “ஐந்தினில் இரவித் திங்கள் ஐங்காரகன் அமர்ந்திருக்க” என்ற பாடலில் 5ஆம் இடத்தில் சூரியன், செவ்வாய் அல்லது சந்திரன் இருந்தால் அவ்வளவு நல்லதல்ல என்பதே அதன் பொருள், இதனால் குழந்தை பேறு பாதிக்கும்.
குறிப்பாக ஐந்தில் செவ்வாய் இருந்தால் தீவிரவாத எண்ணங்கள் மேலோங்கியிருக்கும். நான் இங்கு குறிப்பிடுவது நாட்டிற்கு எதிரான தீவிரவாதம் அல்ல. அதாவது எந்த ஒரு செயலையும் விரைவாக முடிக்க வேண்டும் என்ற எண்ணங்கள், பொறுமையில்லாமல் இருப்பது போன்ற குணங்கள் அதிகம் காணப்படும். குழந்தைப்பேறு கிடைப்பதில் தடைகள் ஏற்படும்.

ஐந்தில் செவ்வாய், சனி இணைந்திருந்தால் கெடு பலன்களே அதிகம் ஏற்படும். தாய் மாமனுக்கு ஆகாது. அந்தக் குழந்தை பிறந்த உடனேயே தாய் மாமனுக்கு பல்வேறு பிரச்சனைகள், சிக்கல்கள் ஏற்படும். தாய்வழி உறவுகள் துண்டிக்கப்படுதல், மனத்தாங்கல்கள் ஏற்படும். பிறப்புறுப்பு தொடர்பான நோய்கள் அடிக்கடி ஏற்படும். ஆணாக இருந்தால் விதைப்பகுதி பாதிக்கப்படலாம். இதனால் குழந்தைபேறு கிடைப்பதில் பாதிப்பு ஏற்படும்.
அதே நேரத்தில் சில லக்னங்களுக்கு 5இல் செவ்வாய் இருந்தால் சிறப்பான பலன்கள் கிட்டும். உதாரணத்திற்கு கன்னி லக்னத்தில் பிறந்த ஜாதகருக்கு 5இல் செவ்வாய், சனி அமர்ந்தால் பல வேதங்களை அறிந்தவராக அவர் திகழ்வார். வேத நூல்கள், உபநிடங்களுக்கு விரிவுரை, தெளிவுரை எழுதும் தகுதியைப் பெற்றிருப்பர்.
அவர்களுக்கு அனைத்து வகையிலும் திறமைமிக்க புதல்வர்கள் பிறப்பார்கள். அழகு, அறிவு, மதி நுட்பம் ஆகியவை அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு அபரிமிதமாக இருக்கும். எனவே கன்னி லக்னத்திற்கு மட்டும் 5இல் செவ்வாய், சனி நற்பலன்களை அளிக்கும் என்று உறுதியாகக் கூறலாம்.
மற்ற ஜாதகர்களுக்கு 5இல் செவ்வாய், சனி இருப்பதால் ஏற்படும் பாதிப்புகளை நல்ல ஆதிபத்தியம் உள்ள குரு பார்த்தால் கெடு பலன்கள் குறையும்.
பரிகாரம்: செவ்வாய், சனி சேர்க்க பெற்றவர்கள் ரத்த தானம் செய்வது நல்ல பலன்களை அளிக்கும். அதேபோல் அடிபட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பவர்களுக்கு முதலுதவி அளிப்பது போன்ற செயல்களில் ஈடுபடலாம்.உயிர்ப்பலியை எதிர்க்கும் பிரசாரங்கள், அமைப்புகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் தங்களை இணைத்துக் கொண்டு செயல்படலாம்.
தெய்வ வழிபாடு: ஆஞ்சநேயர், சரபேஸ்வரர் வழிபாடு ஆகியவை செவ்வாய், சனி சேர்க்கையால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கும். உண்மையிலேயே ஞானியாக வாழ்ந்து, மக்கள் நலனில் அக்கறை கொண்டு, அவர்கள் துயரைப் போக்க செயலாற்றிய சித்தரின் ஜீவ சமாதிக்கு சென்றும் வழிபடலாம்.
-----------------------------
லக்னத்திற்கு 4,7 ஆகிய கேந்திரங்களில் சுபக் கிரகங்கள் சேர்ந்து நிற்கப் பிறந்த ஜாதகன் பொன் பொருள் மற்றும் கோடி ரூபாய் சம்பாதிக்கும் திறம் பெற்று சிறப்புடன் வாழ்வான். பலவித வாகனம் பெற்று பெருமை அடைவான்.
*    லக்னத்திற்கு 4ம் இடம் சர ராசியாக அமைய அதில் ஒரு கிரகம் நின்றால் அந்த ஜாதகன் அரசனுக்குரிய ஆடம்பர வாழ்க்கை பெற்று யோகவானாக விளங்குவான். பெரியவர்களின் தொடர்பு பெற்று அரசாங்கத்தால் விருது மற்றும் பொருள் பெறுவான். இனிய மனைவி அமைந்து சுக ஜீவனம் செய்வான்.
*    செவ்வாய், சனி, ராகு இவர்கள் ஒரே வீட்டில் கூடி நின்றால் பெண்களால் தன லாபம் உண்டாகும். வீடு கட்டை சுகத்துடன் வாழ்வான். எனினும் தீய தசைகள் நடக்கும் போது இந்த சேர்க்கையினால் சிற்சில துன்பங்களும் உண்டாகும்.
*    பத்தாம் இடத்தில் 3 கிரகங்கள் இருக்கப்பெற்ற ஜாதகன் உலகம் புகழும் சன்னியாசியாக விளங்குவான். இரண்டு கிரகங்கள் இருந்தால் அந்த ஜாதகன் தபசியாகவும் ஞானியாகவும் யோகியாகவும் இருந்து மக்களுக்கு அருள் புரிவான்.
*    4ம் வீட்டிற்கு அதிபதியும் சந்திரனுக்கு நான்கிற்குடையோனும் எந்த ராசியில் கூடி நின்றாலும் மேலும் சுக்கிரன் பலம் பெற அந்த ஜாதகன் தேவி பராசக்தியாகிய துர்கையின் மீது பற்று கொண்டு பூஜை செய்து தேவி அனுக்கிரகம் பெறுவான். கொடியவர்களில் சூழ்ச்சிகள் இவனிடம் பலிக்காமல் இவன் வெற்றி கொள்வான்.
*    ஒரு ராசியில் சுபக்கிரகத்துடன் 4 கோள்கள் நிற்க அதற்கு 4லில் இன்னொருவன் இருக்க அந்த ஜாதகன் தீர்க்க ஆயுளுடன் சுகமாக வாழ்வான். குதிரை, யானை பெற்ற அரசனைப் போல அனேகர் புகழ பொன் பொருள் பெற்று சிறப்பான்.
*    8க்குடையவன் 12க்குடையவன் செவ்வாய் ஆகிய மூவரும் எந்த இடத்தில் கூடி நின்றாலும் அந்த ஜாதகன் அன்னிய தேசம் செல்வான். அதே சமயத்தில் இவர்களை சந்திரன் பார்த்தால் சில காலம் வெளிநாட்டில் அதிக பணம் ஈட்டி பின்னர் சொந்த தேசத்திற்கு வந்து சுகமுடன் வாழ்வான்.
*     சனி, செவ்வாய், ராகு இவர்கள் லக்னத்திற்கு இரண்டாம் இடத்தோனுடன் கூடி நின்றால் அந்த ஜாதகன் சிவ பூஜையில் பிரசித்தி பெற்றவனாவான். மேலும் ஐயனார், காளி, வீரபத்திரன் போன்ற தெய்வங்களை வணங்கி தேவதை அருள் பெற்று வசியம் செய்யும் வித்தையும் அறிந்தவனாவான்.
*    குருவும் சனியும் ராகுவும் சரம் மற்றும் உபய ராசிகளில் நின்றால் அந்த ஜாதகன் சொந்த இருப்பிடத்தை விட்டு தேச சஞ்சாரம் செய்வான். அதே சமயத்தில் லக்னாதிபதி வலுப்பெற்று இருந்தால் சொந்த ஊரிலேயே பலகாலம் வசிப்பான்.
*    சிம்ம ராசியில் அசுர குருவான சுக்கிரனும் செவ்வாயும் கூடியிருந்தால் அந்த ஜாதகன் வித்தைகளில் தேர்ச்சி பெற்று சிற்ப சாஸ்திரத்தில் வல்லமையும் புத்தக ஆராய்ச்சியில் ஈடுபடுபவனாகவும் இருந்து அதிக பொருள் சேர்ப்பான். அன்றியும் அவன் விதவைக்கு வாழ்வளிப்பவனாய் விளங்குவான்.
*    குருவுடன் செவ்வாயும் சுக்கிரனும் சேர அந்த ஜாதகன் நிறைந்த தனங்கள் பெற்று அரசாங்க மரியாதையும் புகழும் அடைவான். செவ்வாயும் புதனும் இணைந்தால் அவன் செல்வச் செழிப்பு மிக்க பண்டிதனாக விளங்குவான். ஆனால் செவ்வாய் புதன் இவர்களுடன் சுக்கிரன் செர்ந்து எங்கு இருந்தாலும் அவனுக்கு அங்க குறைபாடு ஏற்படும்.
*    குரு, சந்திரன், புதன் இவர்கள் சேர்ந்து எங்கு இருந்தாலும் நல்ல அழகும் ஆயுளும் பெற்று செல்வந்தனாகத் திகழ்வான். சுக்கிரன், சந்திரன், புதன் ஆகியோர் சேர துஷ்டனாகவும் காமியாகவும் விளங்குவான்.
*    இரண்டாம் இடத்தில் விரய ஸ்தானதிபதி நின்றால் அந்த ஜாதகன் மாட மாளிகை ஆகிய வீடுகள் கட்டி சிறந்து விளங்குவான். மேலும் லக்னாதிபதியாக குரு, சந்திரன், புதன், சுக்கிரன் இவர்கள் சுபஸ்தானங்களில் நிற்க பொன், பொருள் சேரும். இவர்கள் தசா, புக்தியில் நற்பலன்கள் தருவார்கள்.
*    சூரியனும் சந்திரனும் சேர்ந்து ஓரிடத்தில் நிற்க அவன் தனவானாகவும் மனைவியிடம் அன்பு கொண்டவனாகவும் இருப்பான். சூரியனும் குருவும் சேர அரசாங்க செல்வாக்கு பெற்று ஐஸ்வர்யத்துடன் வாழ்வான். சூரியனும் சுக்கிரனும் சேர நல்ல மனைவி அமையப்பெற்று தாம்பத்தியம் அனுபவிப்பதில் சிறந்து விளங்குவான். சனியுடன் சுக்கிரன் கூடினால் கணவன் பேச்சை கேட்காத மனைவி வாய்ப்பாள்.
*    சந்திரன், செவ்வாய், புதன், சூரியன், குரு ஆகியோர் சேர்ந்து இருந்தால் தீய பலன்களே உண்டாகும். அவன் பிறரையும் கெடுப்பான். மேலும் சூரியன், செவ்வாய், சனி, சுக்கிரன் ஒரே வீட்டில் கூடினாலும் ஜாதகன் வறுமையில் உழன்று பிச்சை எடுத்து உண்ணும் கதிக்கு ஆளாவான்.
*    புதன், குரு இவர்களுடன் சந்திரன், சுக்கிரன் இவர்கள் பலம் பெற்று சேர்ந்து நிற்க அதிக செல்வமும் பூமியும் பொன்னும் பொருளும் பெற்று சுகமுடன் வாழ்வான். மேற்கண்ட கிரகங்களுடன் சனி சேர அங்க குறைவு ஏற்படும்.
*    குரு, சுக்கிரன், சூரியன், புதன் இவர்கள் இணைந்து நின்றவன் அதிக திரவியங்கள் பெற்று சுக போகங்களை அனுபவிப்பான். குரு, சுக்கிரன், சூரியன், செவ்வாய் இவர்கள் சேர அவனும் செல்வாக்கு படைத்த தலைவனாகவும் தீர்க்க தரிசியாகவும் செல்வம் மிகுந்து வாழ்வான்.
*    செவ்வாய்க்கு 4, 7 ஆகிய இடங்களில் சுக்கிரன் நின்றாலோ அல்லது சுக்கிரனுக்கு 5,7,11 ஆகியவற்றில் செவ்வாய் நின்றாலோ அந்த ஜாதகன் பூமியில் சிறந்து விளங்குவான். மேலும் லக்னாதிபதி கேந்திர, கோணத்தில் இருக்க வாகன சேர்க்கையும் சொந்தத் தொழில் மூலம் அனைத்து பாக்கியங்கள் அடைதலும் உண்டாகும். விளை நிலங்களும் சேரும். இதனை இவர்களின் தசா, புக்தி காலங்களில் கொடுப்பார்கள்.
*    குரு, சனி, செவ்வாய், புதன் சேர்ந்து நிற்க சந்திரன், சுக்கிரன் இவர்கள் இணையப்பெற்ற ஜாதகன் புவியியல் சாஸ்திரங்கள் அறிந்தவனாக விளங்குவான்.
*    சந்திரன், சுக்கிரன் ஒன்றுசேர குரு, புதன், செவ்வாய் ஒரிடத்தில் நிற்க அந்த ஜாதகன் பாக்கியசாலி ஆவான். அனேக திரவியமும் செல்வாக்கும் அடைவான். பலரை ஆதரித்து எல்லோராலும் புகழப்படுவான்.
*    குரு, புதன், சனி, செவ்வாய், சந்திரன் ஆகியோர் ஒரே இடத்தில் நிற்கப் பிறந்தவன் துன்பங்களை அனுபவித்து கஷ்ட ஜீவனம் செய்வான்.
குரு சனி சேர்க்கை
கன்னி லக்னத்திற்கு உத்தியோகத்தில் பிரச்சனைகள், மண வாழ்க்கையில் பிரச்சனைகளை குரு சண்டாள யோகம் ஏற்படுத்தும்.
துலா லக்னத்திற்கு இந்த யோகம் காணப்பட்டால், ஓரளவு நல்ல பலன்கள் கிடைக்கும். ஆனால் விருச்சிக லக்னத்திற்கு குரு-சனி சேர்க்கை நன்மையை அளிக்கும். வேதங்கள், இதிகாசங்களில் ஆர்வம் ஏற்படும்.
தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய லக்னங்களுக்கு குரு-சனி சேர்க்கை மிகப் பெரிய முன்னேற்றத்தை அளிக்கும். இவர்களுக்கு குரு அல்லது சனி தசை நடக்கும் போது ராஜ யோகத்தின் பலன்களை அனுபவிப்பார்கள்.
பொதுவாக எந்த லக்னத்தில் பிறந்திருந்தாலும் குரு-சனி சேர்க்கை 11வது இடத்தில் அமைந்திருந்தால், அது யோகப் பலன்களை அளிக்கும். அது சர லக்னமாக இருந்தாலும் நல்ல பலன்கள் கிட்டும். இதற்கு காரணம் குரு, சனி இருவருக்குமே 11ஆம் இடம் உகந்தது என்பதே.
கேந்திர வீடுகளில் (குறிப்பாக 4ஆம், 7ஆம் இடத்தில்) குரு-சனி சேர்க்கை இல்லாமல் இருந்தால் நல்லது.
குரு-சனி சேர்க்கை நன்றாக இல்லாத இடங்களில் காணப்பட்டால் ஈமச் சடங்குகளுக்கு உதவலாம் (ஏனெனில் சனி கர்மத்திற்கு உரிய கிரகம்). நல்ல வேதம் தெரிந்த அந்தணர்களுக்கு உதவலாம். மேலும் குருவும், சனியும் ஆலயத்திற்கு உரிய கிரகங்கள் என்பதால் அவற்றை புதுப்பிக்க, சீரமைக்க உதவலாம்.
ஜோதிடத்தைப் பொருத்த வரை சனி, குருவுக்கு மட்டுமே ராஜ கிரகங்கத்திற்கான அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது . இதில், ஒருவரது ஜனன ஜாதகத்தில் ஒரேவீட்டில்இந்த2கிரகங்களும்இருந்தால்கிடைக்கும்பலன்கள் .
குரு, சனி சேர்ந்திருந்தால் அதனை குரு சண்டாள யோகம் என்று கூறுவர். பொதுவாக வேதம், உபநிடங்கள் இதற்கெல்லாம் உரிய கிரகம் குரு. அதேபோல் சனி சத்ரிய கிரகம் என்று கூறுவர். எனவே, குரு-சனி சேர்க்கை பெற்றவர்கள் அனைத்திலும் திறமையானவர்களாகத் திகழ்வர்.
ஆனால் எந்த லக்னத்திற்கு குரு-சனி ஏற்றது என்பதையும் இங்கே கண்டிப்பாக பார்க்க வேண்டும். ஏனென்றால் மேஷ லக்னத்திற்கு குரு சண்டாள யோகம் ஒரு பலனையும் அளிக்காது. நல்ல பலனைத் தராது என்று ஜோதிட நூல்கள் கூறுகின்றன.
இதேபோல் ரிஷப லக்னத்திற்கு இந்த யோகம் இருந்தால் சிறு வயதிலேயே பெற்றோர் உயிரிழப்பது அல்லது தகப்பானருக்கு சில இடர்பாடுகள் ஏற்படுவது.
மிதுன லக்னத்திற்கு குரு சண்டாள யோகம் இருந்தால் திருமணத் தடைகள் ஏற்படும். திருமணத்திற்கு பின்னரும் மனைவி தரப்பில் சில சிக்கல்கள் காணப்படும்.
கடகம் மற்றும் சிம்ம லக்னத்திற்கு குரு சண்டாள யோகம் அமைந்தால் உத்தமமான மனைவி, மனைவி அமைந்த பின் யோகப் பலன்கள், வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைக்கும்.
கன்னி லக்னத்திற்கு உத்தியோகத்தில் பிரச்சனைகள், மண வாழ்க்கையில் பிரச்சனைகளை குரு சண்டாள யோகம் ஏற்படுத்தும்.
துலா லக்னத்திற்கு இந்த யோகம் காணப்பட்டால், ஓரளவு நல்ல பலன்கள் கிடைக்கும். ஆனால் விருச்சிக லக்னத்திற்கு குரு-சனி சேர்க்கை நன்மையை அளிக்கும். வேதங்கள், இதிகாசங்களில் ஆர்வம் ஏற்படும்.
தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய லக்னங்களுக்கு குரு-சனி சேர்க்கை மிகப் பெரிய முன்னேற்றத்தை அளிக்கும். இவர்களுக்கு குரு அல்லது சனி தசை நடக்கும் போது ராஜ யோகத்தின் பலன்களை அனுபவிப்பார்கள்.
பொதுவாக எந்த லக்னத்தில் பிறந்திருந்தாலும் குரு-சனி சேர்க்கை 11வது இடத்தில் அமைந்திருந்தால், அது யோகப் பலன்களை அளிக்கும். அது சர லக்னமாக இருந்தாலும் நல்ல பலன்கள் கிட்டும். இதற்கு காரணம் குரு, சனி இருவருக்குமே 11ஆம் இடம் உகந்தது என்பதே.
கேந்திர வீடுகளில் (குறிப்பாக 4ஆம், 7ஆம் இடத்தில்) குரு-சனி சேர்க்கை இல்லாமல் இருந்தால் நல்லது.
குரு-சனி சேர்க்கை நன்றாக இல்லாத இடங்களில் காணப்பட்டால் ஈமச் சடங்குகளுக்கு உதவலாம் (ஏனெனில் சனி கர்மத்திற்கு உரிய கிரகம்). நல்ல வேதம் தெரிந்த அந்தணர்களுக்கு உதவலாம். மேலும் குருவும், சனியும் ஆலயத்திற்கு உரிய கிரகங்கள் என்பதால் அவற்றை புதுப்பிக்க, சீரமைக்க உதவலாம்
ஒன்பதாம் இடத்தில் சேர்க்கை 

ஒன்பதம் வீடு தந்தை. மத ஆச்சாரம். குல வழக்கம். குரு. உடனே பலம் தரும் தெய்வம். மதப்பற்று. மறுஉலக தொடர்பு. பெரியவர்கள். தூரத்து செய்திகள். திருமண மண்டபம். கலாச்சார விருப்பம். நீண்ட தூரப் பயணம். தொழில் விரயம். தெய்வ வழிப்பாட்டு இடம். தம்பியின் மனைவி. ஒன்றினை தியாகம் செய்தல். பணம் புரட்டுதல். ஜபம். உயர் கல்வி. வெளிநாட்டுப் பயணம்,தந்தை, தந்தை வழி உறவுகள், பூர்வீகச்சொத்துக்கள், தான, தர்ம குணங்கள்,வெளி நாட்டுப் பயணங்கள், முயற்சி இன்றிக் கிடைக்கக்கூடிய ஆதாயங்கள்.
பன்னிரெண்டு வீடுகளுக்கும் உரிய உடற் பகுதிகள்:


9ஆம் வீடு: இடுப்பு, இடுப்பு இணைப்புக்கள் அனைத்தும்



ஒன்பதாம் வீடு.

1. ஒன்பதில் சூரியன் சென்று நல்லவிதமாக அமர்ந்திருந்தால், ஜாதகன் பொறுப்புணர்வு மிகுந்தவனாக இருப்பான். இறை நம்பிக்கை உள்ளவனாக இருப்பான். ஜாதகன் எதிலும் ஆர்வம் உள்ளவனாக இருப்பான். ரசனை, நகைச்சுவை உணர்வுகள் மிகுந்தவனாக இருப்பான்.


2. ஒன்பதில் சூரியனும், புதனும் சேர்ந்து அமர்ந்திருந்தால் (அதற்கு புத ஆதித்ய யோகம் என்று பெயர்) ஜாதகன் அதிகம் படித்தவனாகவும், செல்வம் மிகுந்தவனாகவும் இருப்பான்.



3. ஒன்பதில் சூரியனுடன், சுக்கிரன் கைகோர்த்து அமர்ந்திருந்தால் ஜாதகன் நோய்கள் உள்ளவனாகவும், மிகுந்த உடல் உபாதைகள் உள்ளவனாகவும் இருப்பான்.



4, இங்கே சூரியன் கெட்டுப்போய் அமர்ந்திருந்தால் அல்லது தீயவர்களின் கூட்டோடு அமர்ந்திருந்தால், ஜாதகன் தெனாவெட்டாக இருப்பான். தன்னுடைய தந்தை, பெரியவர்கள் என யாரையும் மதிக்க மாட்டான். இறை நம்பிக்கை இல்லாதவனாக இருப்பான்.



5. ஒன்பதில் குரு அல்லது சுக்கிரன் இருவரில் ஒருவர் அமர்ந்திருந்தாலும் அல்லது இருவரும் சேர்ந்து அமர்ந்திருந்தாலும் (5 பாகை இடைவெளியுடன்) அதோடு அவர்கள் ஒன்பதாம் அதிபனின் பார்வை பெற்றிருந்தால் ஜாதகன் அதிர்ஷ்டம் உடையவனாக வாழ்வான். அவனுடைய வாழ்க்கை சிறப்பாக

இருக்கும்.


6. லக்கினாதிபதியும், ஒன்பதாம் இடத்து அதிபதியும் பரிவர்த்தனை யோகம் பெற்றிருந்தால் (அதாவது ஒருவர் வீட்டில் இன்னொருவர் மாறி அமர்வது (The lagna lord and ninth lord exchanging their houses), ஜாதகன் எல்லா விதத்திலும் அதிர்ஷ்டம் உள்ளவனாக இருப்பான். The native of the horoscope will be very lucky in all respects.



7. ஒன்பதாம் இடமும், பத்தாம் இடமும் மிகவும் முக்கியமானதாகும். ஒன்பதிற்குப் பெயர் தர்ம ஸ்தானம். 10ற்குப் பெயர் கர்ம ஸ்தானம். அந்த இரு இடங்களுக்கும் உரிய வீட்டு அதிபர்களுக்குப் பெயர் தர்ம - கர்ம அதிபதிகள். அவர்கள் இருவரும் பரிவர்த்தனை யோகம் பெற்றிருந்தால் (அதாவது ஒருவர் வீட்டில் இன்னொருவர் மாறி அமர்வது The ninth lord and tenth lord exchanging their houses) அந்த யோகத்திற்குப் பெயர் தர்மகர்மாதிபதி யோகம். அந்த யோகம் பெற்றவன் அதீதமான பொருள் ஈட்டுவான். ஏராளமான தர்ம காரியங்களைச் செய்வான். கோவில்களுக்குத் திருப்பணி செய்வது, இலவச மருத்துவமனைகள் கட்டுவது, பள்ளிகள், கல்லூரிகளைக் கட்டுவது, பெரிய அளவில் அடிக்கடி அன்னதானம் செய்வது, ஏழைகள், எளிய மக்களுக்கு உதவிகள் செய்வது - ஆகிய செயல்கள் தர்ம காரியங்கள் ஆகும் (இது அதைப்பற்றித் தெரியாத இளைஞர்களுக்காக விவரிக்கப்பட்டுள்ளது அல்லது எடுத்துச் சொல்லப்பட்டது என்று வைத்துக் கொள்ளுங்கள்)



8. ஒன்பதாம் வீட்டில் குரு அல்லது சுக்கிரன் அல்லது சந்திரன் வந்து அமர்ந்திருந்தால் ஜாதகன் அதிர்ஷ்டமானவன்.



9. ஒன்பதாம் வீட்டில் சனி அல்லது ராகு அல்லது கேது அமர்ந்திருந்தால், ஜாதகன் துரதிர்ஷ்டமானவன்.



10. 11ஆம் இடத்து அதிபதி ஒன்பதில் அமர்ந்து, பத்தாம் இடத்து அதிபதியின் பார்வை பெற்றால், ஜாதகனுக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு.



11. அதேபோல ஒன்பதாம் வீட்டுக்காரன் 2ல் அமர்ந்து, பத்தாம் வீட்டு அதிபதியின் பார்வை பெற்றாலும் ஜாதகனுக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு.



12. ஒன்பதில் சந்திரன் அமர்ந்திருந்தால், ஜாதகன் அதிர்ஷ்டமானவன். வளமாக வாழக்கூடியவன். நிறையக் குழந்தைகள், உறவினர்கள், நண்பர் களை உடையவன். அதிகாரத்தில் உள்ளவர்களின் தொடர்பு உடையவன். கொள்கைப்படி நடப்பவன். பெருந்தன்மை உடையவன்.



13. இங்கே அமரும் சந்திரன் நல்ல பார்வை பெற்று அமர்ந்தால், ஜாதகன் பல தர்மச் செயல்களைச் செய்வான். பலவிதமான சொத்துக்களை வாங்கிக்

குவிப்பான். பல நாடுகளுக்கும் சென்று வருவான்.


14. ஒன்பதில் சந்திரனுடன் சனியும் சேர்ந்தமர்ந்தால் அல்லது இங்கே அமரும் சந்திரன் சனியின் பார்வை பெற்றால், ஜாதகன் பலவிதமான

துன்பங்களை அனுபவிக்க நேரிடும்.


15. ஒன்பதில் சந்திரன் இருந்து, அந்தச் சந்திரனை, சனி, செவ்வாய், புதன் ஆகிய மூன்று கிரகங்களும் பார்த்தால் (தங்களது பார்வையால்) ஜாதகன்

ஒரு அரசனைப் போல வாழ்வான். (He will be a ruler)


16. சந்திரனுடன், செவ்வாய் சேர்ந்து ஒன்பதில் இருந்தால், ஜாதகனின் தாய்க்கு விபத்து போன்ற துன்பங்கள் நேரிடலாம்.



17. இங்கே இருக்கும் சந்திரன் சுக்கிரனின் சேர்க்கை பெற்றால், ஜாதகன் நெறிமுறைகள் இல்லாதவனாக இருப்பான். பல பெண்களோடு தொடர்பு கொண்டு வாழ்வான். ஜாதகிக்கும் இதே பலன்கள்தான்.




18. Second lord in the 11th, 11th lord in the ninth and ninth lord in the second (exchanges), the native will be very lucky. ஆதீதமான பொருள் சேரும்.



19. 3ஆம் அதிபதியும், ஒன்பதாம் அதிபதியும் சேர்ந்து நல்ல நிலைமையில் இருந்தால் அல்லது வலுவாக இருந்தால், ஜாதகன் தன் சகோதரர்கள் மூலமாக பல உதவிகளைப் பெற்று வாழ்க்கையில் முன்னேற்றம் காண்பான்.



20. 5ஆம் அதிபதியும், 9ஆம் அதிபதியும் சேர்ந்து நல்ல நிலைமையில் இருந்தால், ஜாதகனின் பின்வாழ்க்கை நன்றாக இருக்கும். அவன் தன்னுடைய வயதான காலத்தில் தன் குழந்தைகள் மூலம் வசதியாக வாழ்வான்.



21. ஒன்பதாம் வீட்டு அதிபதி பாவ கிரகங்களின் வீட்டில் அமர்ந்தல் ஜாதகன் தன் தந்தையைத் தன் இளம் வயதிலேயே இழக்க நேரிடும்.



22. லக்கினத்திற்கு ஏழில் சூரியன் நல்ல நிலைமையில் இருந்தால், ஜாதகனுக்கு அவனுடைய தந்தை மூலமாக செல்வங்கள் கிடைக்கும்.



23. ஜாதகத்தில் சூரியன் எந்த இடத்தில் இருந்தாலும் - நல்ல நிலைமை யில் இருந்தால், ஜாதகன் தன் தந்தைக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கக் கூடியவன்.



24. ஜாதகத்தில் சூரியன், சனி அல்லது ராகு அல்லது கேது அல்லது மாந்தியால் கெட்டிருந்தால், ஜாதகனால் அவனுடைய தந்தைக்குத் துன்பங்கள்தான் ஏற்படும்.



25. சூரியனுக்குத் திரிகோணத்தில் செவ்வாயும் அல்லது சந்திரனுக்குத் திரிகோணத்தில் சனியும் இருந்தால், ஜாதகன், அவனுடைய பெற்றோர் களால் புறக்கணிக்கப்படுவான்.



26.ஒன்பதாம் வீட்டில் செவ்வாய் சென்றமர்ந்தால், ஜாதகன் அதிகாரங்கள் உடையவனாக இருப்பான்.வேலையில் அல்லது தொழிலில் அல்லது ஆட்சியில் அல்லது அரசில் எப்படி வேண்டுமென்றாலும் அந்த அதிகாரம் அமையும். அந்த அமைப்பானது அவனது தொழில் ஸ்தானத்தைவைத்து

மாறுபடும். ஆனால் அதிகாரங்கள் உடையவனாக இருப்பான்.



27. ஒன்பதாம் இடத்தில் அமரும் செவ்வாயோடு சுக்கிரன் சேர்ந்தால், ஒன்றிற்கு மேற்பட்ட மனைவிகள் அல்லது பெண்கள் தொடர்பு உண்டாகும். ஜாதகனுக்கு வெளிநாட்டு வாழ்க்கை ஏற்படும்.



28. ஒன்பதில் செவ்வாயும், சனியும் கூட்டாக அமர்ந்தால் ஜாதகன் போதைக்கு அடிமையாவான். போதை என்பது பல விதமான போதைகளில் ஒன்றைக்

குறிக்கும் (addiction to women or some other things). பிடிவாதக்காரனாகவும், முரண்பாடுகள் உடையவனாகவும் இருப்பான்.


29. ஒன்பதாம் இடத்தில் புதன் அமர்ந்தால், கல்வியாளனாக ஜாதகன் இருப்பான் (scholar).



30. ஒன்பதில், புதனுடன் சுக்கிரனும் சேர்ந்திருந்தால், ஜாதகன் விஞ்ஞானியாக அல்லது பெரிய இசை மேதையாக இருப்பான். கெட்டிக்காரனாக இருப்பான். அந்த அமைப்பானது அவனது தொழில் ஸ்தானத்தை வைத்து மாறுபடும். ஆனால் மேதையாக இருப்பான்.



31. ஒன்பதில், புதனுடன் குரு சேர்ந்திருந்தால், ஜாதகன் சிறந்த அறிவாளியாக இருப்பான். நகைச்சுவை உணர்வு மேலோங்கியவனாக இருப்பான். தந்தையுடன் நட்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பான். பல அமைப்புக்களில் சிறப்பாக உரை யாற்றுபவனாக இருப்பான். வெளி நாடுகளில் உள்ள கழகங்களின் அழைப்பின் பேரில் சென்று உரையாற்றுபவனாக இருப்பான்.



32. ஒன்பதில் சனி இருந்தால், ஜாதகன் தனித்து வாழும்படி ஆகிவிடும். சிலருக்குத் திருமண வாழ்க்கை இல்லாதுபோய்விடும். இந்த அமைப்புள்ள ஜாதகன் ராணுவத்தில் இருந்தால் பெரிய வீரனாகச் சிறப்படைவான்.



33.ஒன்பதில், சனியுடன் சூரியனும் சேர்ந்திருந்தால், ஜாதகனுக்குத் தன் தந்தை மற்றும் தன் குழந்தைகளுடன் நேசம் இருக்காது.



34.ஒன்பதில், சனியுடன் புதன் சேர்ந்திருந்து, நல்ல பார்வை எதுவும் இல்லை யென்றால், ஜாதகன் நம்பிக்கைக்கு உரியவனாக இருக்கமாட்டான். பலரையும் ஏமாற்றிப் பிழைப்பான். அவன் செல்வந்தனாக இருந்தாலும், இப்படிப்பட்ட குணமுடையவனாகத்தான் இருப்பான்.



35.ஒன்பதில் குரு இருந்தால், ஜாதகன் சட்டத்துறையில் அல்லது தத்துவத்தில் நிபுணனாக இருப்பான். இங்கே அமரும் குரு நல்ல பார்வை பெற்றால், அபரிதமான பொருள் ஈட்டுவான். சொத்துக்கள் சேரும். சகோதரர்கள் மேல் நேசமுடைய வனாக இருப்பான்.



36.ஒன்பதில் இருக்கும் குரு, சந்திரன் மற்றும் செவ்வாயின் பார்வை பெற்றால், ஜாதகன் ராணுவம் அல்லது காவல்துறையில் பெரிய அதிகாரியாக விளங்குவான்.



37. ஒன்பதில் குருவுடன் சூரியன் மற்றும் சுக்கிரன் சேர்ந்தால், ஜாதகன் நடத்தை சரியில்லாதவனாக ஆகிவிடுவான்.



38. ஒன்பதில் சுக்கிரன் இருந்தால், ஜாதகன் மிகவும் அதிர்ஷ்டமானவன். கல்வி, வேலை, மனைவி, குழந்தைகள் என்று எல்லாமே அவனுக்குச் சிறப்பாகக் கிடைக்கும். மகிழ்ச்சியாக வாழ்வான்.



39. ஒன்பதில் சுக்கிரனும் சூரியனும் சேர்ந்திருந்தால், ஜாதகன் அருமையாகப் பேசக்கூடியவனாக இருப்பான். உடல் உபாதைகள் உடையவனாகவும் இருப்பான்.



40. ஒன்பதில் சுக்கிரனுடன் சனி சேர்ந்திருந்தால் ஜாதகன் பஞ்சாயத்து, சமரசப் பேச்சுக்கள்,தூதுவராகச் செயல்படுவது ஆகியவற்றில் சிறந்து விளங்குவான். ஒரு அரசனின் கீழோ அல்லது ஒரு நாட்டு அரசிற்கோ தூதுவனாகச் செயல்படுவான். மனிதர்களைப் பற்றியும் உலக நடைமுறை விஷயங்களைப் பற்றிய அவனுடைய கருத்துக்களும், கண்ணோட்டங்களும் சிறப்பாக இருக்கும்.



41.ஒன்பதில் சுக்கிரனுடன் சூரியனும், சனியும் சேர்ந்திருந்தால் ஜாதகன் notorius criminal ஆக இருப்பான். அல்லது அதுபோன்ற விஷயங்களில் தீவிர ஈடுபாடு உடையவனாக இருப்பான்.



42. ஒன்பதில் ராகு இருப்பது பலவிதங்களில் நல்லதல்ல. அந்த ராகு வேறு நல்ல கிரகங்களின் பார்வை பெறவில்லை என்றால், ஜாதகன் கடுகடுப்பான ஆசாமியாக இருப்பான். வாழ்க்கை துன்பங்கள் நிறைந்ததாக இருக்கும்.



43. ஒன்பதில் ராகு இருந்து ஜாதகனின் ஏழாம் வீடும் கெட்டிருந்தால், ஜாதகனுக்கு மிகவும் அவலட்சணமான மனைவி வந்து சேர்வாள். அவனுடைய மண வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்காது.



44. ஒன்பதில் ராகு இருந்தால் பூர்வீகச் சொத்துக்கள் கிடைக்காது. ஜாதகத்தின் வேறு அமைப்புக்களால் கிடைத்தாலும், மிகுந்த வம்பு, வழக்கு, போராட்டங்களுக்குப் பிறகே கிடைக்கும்.



45. ஒன்பதில் கேது இருந்தால், ஜாதகன் உணர்ச்சி வசப்படுபவன் (short tempered). மனநிலை பிரள்பவன்.



46. ஒன்பதாம் இடத்துக் கேது, ஜாதகனுக்கு அவனுடைய பெற்றோர்களுடன் நல்ல உறவை ஏற்படுத்தாது.



47. ஒன்பதாம் இடம், தந்தை, தந்தைவழி உறவினர்கள், பூர்வீகச் சொத்துக்கள், வெளிநாட்டுப் பயணங்கள் அல்லது வெளிநாட்டு வாழ்க்கை, முயற்சி இன்றிக் கிடைக்கும் பலன்கள் (பாக்கியம்) ஆகியவை சம்பந்தப்பட்டது.



48. பெண்களுக்கு இந்த வீடு மிகவும் முக்கியமானது. இது நன்றாக அமையப் பெற்ற பெண் வாழ்க்கையில் எல்லா பாக்கியங்களையும் பெற்று மகிழ்வோடு வாழ்வாள்.



49. இந்த வீடு சரிவர அமையாத மங்கை நல்லாள் வாழ்க்கையில் பலவித இன்னல்களுக்கு ஆளாவாள்.



50. இந்த ஒன்பதாம் வீட்டிற்குரிய பலன்கள், அதன் அதிபதி, மற்றும் அதில் அமர்ந்துள்ள கிரகங்களின் தசா, புத்தி காலங்களில் கிடைக்கும் அல்லது

உண்டாகும் அல்லது நடைபெறும்.
--------------------------------------------------
குரு கேது சேர்க்கை ஆன்மீகத்தில் உயர்வு ஏற்படும்.


சூரியன் புதன் சேர்க்கை - நல்ல கல்வி அறிவு ஆராய்ச்சி பத்தி பெரும் அமைப்பு கிடைக்கும்.

செவ்வாய் சுக்கிரன் இணைவு மனைவி மூலம் லாபம் யோகம், எப்போதும் காம எண்ணம் இருக்கும்.
குரு ராகு சேர்க்கை வெளி நாடு யோகம் மற்றும் நாத்திக எண்ணம் வரும்.
சுக்கிரன் சனி சேர்க்கை காம செயலில் ஈடுபாடு . வாகன வசதி செல்வா சேர்க்கை வரும்.


சுக்கிரன் ராகு அல்லது கேது குடும்ப வாழ்வில் சிக்கல்.



செவ்வாய் சனி சேர்க்கை சகோதர பகை ,சிக்கலான நிலம், ரத்தம் சம்பந்தமான நோய்.

பாக்கிய ஸ்தானாதிபதி அந்த ஸ்தானத்திற்கு திரிகோணங்களான 1, 5, 9 ல் இருக்க அமைந்த ஜாதகனுக்கு பொருள் சேர்க்கையும் நிலம்தோப்பு மற்றும் அரண்மனை போன்ற வீடு இவை அமைந்து மகிழ்வுடன் வாழ்வான். தான தருமம்மற்றும் கோயில் பணிகள் செய்து பேரும் புகழும் அடைவான். அதே சமயத்தில் லக்னாதிபதி 6, 8, 12 ல் மறைய தனவிரயமும் பூர்வீக சொத்துக்கள் நஷ்டமும் உண்டாகும்.
5, 6 க்குடைய கிரகங்கள் ல் நிற்க அவர்களைப் பாவர் நோக்க அந்த ஜாதகனுக்கு பிள்ளைகள் இருக்காது. ஆனால் குரு பகவான் பார்வை பெற குழந்தைகள் உண்டாகும்.
குருசந்திரன்சுக்கிரன் ஆகியோர் 5ல் நிற்க அமையப் பெற்ற ஜாதகன் இவ்வுலகில் சிறப்புடன் வாழ்வான். யோகங்கள் உண்டு. குரு 5ல் தனித்து நிற்க புத்திர பாக்கியம் குறைவு. சந்திரன் 5ல் தனித்திருக்க பெண் குழந்தைகள் உண்டு.
மேற்சொன்ன மூவரும் 2, 11ம் இடங்களில் இருந்தால் அந்த ஜாதகன் உத்தமனாகவும் கீர்த்திமானாகவும் விளங்குவான். பல வாகனங்களும் சேரும். பல வித்தைகளில் சிறந்து விளங்குவான். புதையலும் தனமும் கிட்டும்.
சுக்கிரன் கேந்திர ஸ்தானமான 4ல் இருந்தால் யோகங்கள் அதிகம் உண்டாகும். வாகனங்கள் சேரும். பூமி லாபம் பெறுவான். சுக போகங்களை அனுபவிப்பான். அதே சமயத்தில் பாவக்கிரகமான சனி 10ம் இடத்தில் இருந்தால் அந்த ஜாதகனுக்கு பிரபல யோகம் உண்டாகும்.
சந்திரனுக்கு 6, 7, 8 ஆகிய இடங்களில் சுபக் கிரகங்கள் நிற்கப் பிறந்த ஜாதகன் சிறந்த பலன்களும் நலமான வாழ்வும் அடைவான். மந்திர சக்தியும் பெறுவான். அரசாங்க நன்மைகளும் உண்டாகும். இருப்பினும் லக்னாதிபதி வலுப்பெறாவிட்டால் மேற்கண்ட யோகங்கள் உண்டாகாது.
சூரியன்சனிபாக்கியாதிபதி இவர்கள் 6ம் இடத்தில் நிற்க அந்த ஜாதகனுக்கு திரவியம் அதிகம் உண்டு. மற்ற இடங்களில் இருந்தாலும் நகைச்சுவைநடிப்பு போன்ற துறைகளில் சிறந்து விளங்குவான் என்பதாகும்.
குருவுடன் புதன் சேர நல்ல பாக்கியங்கள் அடைந்து உத்தமனாவான். சுக்கிரனுடன் புதன் சேர்ந்தால் பெரியோர்கள் நட்பு பெற்றவனாகவும்சிறந்த பாடகனாகவும் விளங்குவான். சனியோடு புதன் சேர பெரிய தனவானாவன். மேலும் எதிரி பயமோ விஷ பயமோ இல்லாமல் அதிக பொருள் சேர்ப்பான். இவர்கள் சேர்க்கை சுப ஸ்தானங்களில் இருக்க நன்மை பயக்கும்.
சனிசெவ்வாய்சந்திரன்புதன் இவர்கள் சேர ஜாதகனுக்கு நீண்ட ஆயுள் உண்டு. எனினும் சோம்பேறியாகவும்வருமானம் இல்லாதவனாகவும் அலைச்சல் அடைவான். சொந்த வீடு இருக்காது. இவர்களை குரு பார்க்க மேற்கண்ட துயரங்கள் நீங்கி நற்பலன்கள் உண்டாகும்.
சூரியன்புதன் இவர்கள் சேர்ந்து 1,4,8 ஆகிய இடங்களில் நிற்க குருவும் 10ம் அதிபதியும் நோக்க அந்த ஜாதகன் பெரும் செல்வம் அடைந்து புகழடைவான். பூமிவாகனம் அமைந்து ஏவலாட்கள் பணி செய்வர்.
5, 6 க்குடைய கிரகங்கள் ல் நிற்க அவர்களைப் பாவர் நோக்க அந்த ஜாதகனுக்கு பிள்ளைகள் இருக்காது. ஆனால் குரு பகவான் பார்வை பெற குழந்தைகள் உண்டாகும்.
சூரியன்சனிபாக்கியாதிபதி இவர்கள் 6ம் இடத்தில் நிற்க அந்த ஜாதகனுக்கு திரவியம் அதிகம் உண்டு. மற்ற இடங்களில் இருந்தாலும் நகைச்சுவைநடிப்பு போன்ற துறைகளில் சிறந்து விளங்குவான் என்பதாகும்.
குருவுடன் புதன் சேர நல்ல பாக்கியங்கள் அடைந்து உத்தமனாவான். சுக்கிரனுடன் புதன் சேர்ந்தால் பெரியோர்கள் நட்பு பெற்றவனாகவும்சிறந்த பாடகனாகவும் விளங்குவான். சனியோடு புதன் சேர பெரிய தனவானாவன். மேலும் எதிரி பயமோ விஷ பயமோ இல்லாமல் அதிக பொருள் சேர்ப்பான். இவர்கள் சேர்க்கை சுப ஸ்தானங்களில் இருக்க நன்மை பயக்கும்.
சனிசெவ்வாய்சந்திரன்புதன் இவர்கள் சேர ஜாதகனுக்கு நீண்ட ஆயுள் உண்டு. எனினும் சோம்பேறியாகவும்வருமானம் இல்லாதவனாகவும் அலைச்சல் அடைவான். சொந்த வீடு இருக்காது. இவர்களை குரு பார்க்க மேற்கண்ட துயரங்கள் நீங்கி நற்பலன்கள் உண்டாகும்.
சூரியன்புதன் இவர்கள் சேர்ந்து 1,4,8 ஆகிய இடங்களில் நிற்க குருவும் 10ம் அதிபதியும் நோக்க அந்த ஜாதகன் பெரும் செல்வம் அடைந்து புகழடைவான். பூமிவாகனம் அமைந்து ஏவலாட்கள் பணி செய்வர்.

1 comment: