jaga flash news

Monday 10 December 2012

இரண்டாவது திருமணம் பற்றி ஜாதகத்தில் அறியமுடியுமா?


இரண்டாவது திருமணம் பற்றி ஜாதகத்தில் அறியமுடியுமா?

இரண்டாவது திருமணம் பற்றி ஜாதகத்தில் அறியமுடியுமா? 

சுக்கிர நாடி என்ற நூலில் இதுபற்றி அதிகம் கூறப்பட்டிருக்கிறது. திருமண சம்பந்தப்பட்ட அனைத்திற்கும் சுக்கிரநாடிதான் அடிப்படை நூலாகும்.
அதாவது ஒருவருடைய ஜாதகத்தில் 7ஆம் இடம் வாழ்க்கைத் துணைக்கான இடம். 8ஆம் இடத்தையும் பார்க்க வேண்டும். ஏழிற்குரிய கிரகம் பலமாக இருக்க வேண்டும். ஏழிற்குரிய கிரகம் எத்தனை கிரகங்களுடன் சேர்ந்திருக்குமோ அத்தனை தாரம் அவனுக்கு என்று சொல்லப்படுகிறது.
மேலும், இருவருக்குமே ஜாதகப் பொருத்தம் பார்த்து ஒரே தாரம்தான் என்று கணித்திருந்தாலும், திருமண வைபவம் நடக்கக்கூடிய நாள் மோசமான நாள் அல்லது மோசமான யோகம் கூடிய நாளில் தாலிக்கட்டினால் இரண்டாவது தாலி கட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
ஒரு சில ஜாதகத்தில் இரண்டாம் திருமணம் இல்லவே இல்லை என்று சொல்லப்பட்டிருந்தாலும் அவர்களுக்கு இரண்டாம் தாரம் ஏற்படும். அதற்குக் காரணம் அவர் முதல் தாலி கட்டிய நாள் அப்படி அமைந்திருக்கும்.மோசமான தசையில், அதாவது ஏழாம் இடத்தில் கேது அமர்ந்து கேது தசை நடந்தால் மனைவி திடீர் விபத்தில் மரணமடைதல், கருத்து வேறுபாட்டால் பிரிதல் போன்றவை நிகழும்.
பாவ கிரகங்கள் கோச்சார ரீதியாக வந்து போகும். பாவ கிரகங்கள் இரண்டாம் தாரத்தை ஏற்படுத்திவிட்டுப் போகும்.
ஆனால், இன்றைய காலக்கட்டத்தில் இரண்டாம் தாரம் சாதாரணமாகிவிட்டது. ஏனெனனில் இப்போதெல்லாம் செவ்வாய் தோஷம், களத்ர தோஷத்துடன்தான் நிறைய பிள்ளைகள் பிறக்கிறார்கள்.
அதாவது ஜோதிடத்தில் பார்க்கும்போது 4 ஆம் இடம் நடத்தையைத் தீர்மானிக்கும். 4 ஆம் இடத்தில் பாவ கிரகம் இருக்கும். அதை வைத்து அவர் ஒழுங்கீனமானவர் என்று தீர்மானிக்க இயலாது. 4 ஆம் அந்த வீட்டிற்குரிய கிரகம் நன்றாக இருந்தால் அவரை ஒழுக்கமானவர் என்று தீர்மானிக்கலாம்

No comments:

Post a Comment