jaga flash news

Tuesday 18 December 2012

universe


பஞ்சபூதங்கள்- universe




நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் எனும் ஐந்து இயற்கை பூதங்களும், மஹா பூதங்கள் என அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு பூதமும் தனித்தனி குணங்கள் பெற்றிருப்பினும் அவைகள் ஒன்றோடொன்ற சேர்க்கப்படும்போது முற்றிலும் வித்தியாசமான முறையில் செயல்படுகிறது. பஞ்சபூதங்களும் பெருமளவில் வீட்டில் இருக்க வேண்டும். அப்போதுதான் நல்லவை செய்யும் சக்தி வீடெங்கும் பெருகி அதிர்வு அலைகள் அருளும்.


ஆகாயம்
மற்ற நான்கு பூதங்களும் தடையின்றி சுழல்வதற்கு உதவுகிறது. மனிதனி¢ன் கேட்கும் திறமையும் இதைப் பொறுத்தே உள்ளது. இனிய, மென்மையான ஒலிக்கின்ற அமைதியான இடமாக வீடு இருக்க வேண்டும். வீட்டின் வடகிழக்கு பகுதியில் ஆகாயம் ஆட்சி புரிகிறது. நன்மைகளை ஊக்குவிக்கும் காஸ்மிக் கதிர்கள் வீட்டில் ஊடுருவ வடகிழக்கு பாகம் திறந்த நிலையில் விசாலமாக இருக்க வேண்டும். நிம்மதியாக தன்னைத்தானே அறிந்து கொள்வதற்கம் தியானம், யோகா செய்வதற்கும் கல்வி, நற்காரியங்களுக்கும் வடகிழக்கு திசை தலைசிறந்தது.

வாயு
வாயு அல்லது காற்று புருஷாவின் மூச்சு அக்னியுடன் கூட்டுறவு கொண்டது. காரணம் காற்று நெருப்பை ஊக்குவிக்கும். இவ்விரண்டு பூதங்களும் சதா அசைந்து கொண்டிருக்கும் குணம் உடையவை. மனித உடலைத் தொடும் உணர்வினால் அறியப்படுகிறது. ஆதலால் அழகிய தோற்றமும், பொலிவும் நல்ல காற்றோட்டமும் மிகுந்த வீடுகள் அமைத்தல் நல்லது. வீட்டின் வடமேற்கு பகுதியின் ஸ்தானதிபதி ஈரப்படாத காற்று அல்லது தண்ணீர்.

நெருப்பு அல்லது அக்னி
பஞ்சபூதங்களில் மிக முக்கியமானது. வாழ்க்கைக்கு மிகவும் அவசியமானது. மனிதனின் பார்வைக்க தொடர்புடையது. வீட்டினில வெளிச்சம் பற்பல வண்ணங்கள் தட்பவெப்பநிலை மிக முக்கியமான அம்சங்கள் நெருப்பு முக்கோணமான வடிவில் உள்ள வீட்டுமனையை தவிர்க்க வேண்டும். அது விரும்பி வேண்டாத நெருப்பை தூண்டும். வீட்டின் தென்கிழக்கு பாகம் நெருப்பின் அதிகாரத்திற்கு உட்பட்டது. சமையல் அறைக்கு உகந்த இடம் அக்னி. நமது ஜீரண உறுப்புகளோடும் சம்பந்தப்பட்டது. ஆதலால் வீட்டின் தென்கிழக்கு பாகத்தில் சமைக்கப்பட்டது. உணவு, உடல் நலம் காக்கும் என்பதன் உறுதி செய்கிறது.

நீர்
நீர். திரவ லநயில் உள்ளதால் ஓயாது அசைந்து கொண்டே இருக்கும். அது வட்டத்தால் குறிப்பிடப்படுகிறது. வட்டவடிவமான கட்டம் ஓய்வு அற்ற நிலையின் உணர்வை உண்டாக்குகிறது. உதாரணம் (பார்லிமென்ட் கட்டடம்&டெல்லி) இது சுவை நீரைக் குறிக்கிறது. வாசனை அறியும் உணர்வுடன் தொடர்வுடையது. வீட்டில் தண்ணீர் குழாய் பாதையையும் ஒளி பிரதிபலிக்-கும் வெள்ளி முலாம் பூசப்பட்ட கண்ணாடியின் மேல்மட்டம். முலாம் பூசாத கண்ணாடியின் மேல்மட்டத்தையும் குறிப்பிடுகிறது. வடமேற்க பாகம் குளியல் அறை, விருந்தினர் அறை அமைக்க மிகச் சிறந்த இடம். இங்கு பலதரப்பட்ட ஜனங்கள் அதிக நாள் தங்காது வந்து போகும் வாய்ப்பு உள்ளது.

பூமி
நிலம் அமைப்பின் குணத்தை குறிப்பிடுகிறது. பூமியின் மீதுள்ள நீர், நெருப்பு, காற்று இவற்றின் செயல்பாடுகளைப் பொருத்து வாசனை அறியும் உணர்வை அடிப்படையாகக் கொண்டது. நல்ல மணமும், நல்ல மணம் பரப்பும் (அரோமஸ்) மிகுந்த அளவில் வீட்டில் இருக்க வேண்டும். தென்மேற்கு (மூலை) பாகம் பூமியால் ஆளப்படுகிறது. பூமியின் ஒத்துப் போகும் குணம் அதிக எடை தாங்கும் குணம் உடையது. மதிப்பு மிகு மரச்சாமான்களும், சேமிப்பு அலமாரிகளும் வைக்க மிகவும் சிறந்த இடம் தென்மேற்கு. இந்த (ஐந்து) பஞ்சபூதங்களும் ஒன்றையொன்று அனைத்து செல்லும்போது முழுசக்தியின் தோற்றம் உருவாகிறது. இது வாஸ்து புருஷ மண்டலம் என அழைக்கப்படுகிறது. இது அளிவின் அடிப்படையில் கருதாது ஒவ்வொரு பூதங்களும் செயல்படும் பங்கு அளவின் விகித அடிப்படையில் அறிந்துகொண்ண வேண்டும். இது ஒரு குறிப்பிட்ட பாகத்தில் பல அடுக்கு சக்திகளின் செயல்பாடுகளைக் குறிக்கிறது.

1 comment: