jaga flash news

Sunday 26 October 2014

தாரபலம் விளக்கம்

தாரபலம் விளக்கம்.

                      
இன்று பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாரபலத்தைப் பற்றி ஆய்வு செய்யலாம்.
ஜனனப் பத்திரம் என்பதுநாம் பிறக்கும் போதுஎந்தெந்த திசைகளில்எந்த இராசிமண்டலத்தில்எந்த நட்சத்திரச் சாரத்தில்  கிரகங்கள் இருந்தன என்பதை அறியும்காலக்கண்ணாடியாகும்சூரியனின் இராசி இருப்பிலிருந்துபிறப்பு நேரம் வரை உள்ள தொலைவேஇலக்கினமாகப் பாவிப்பதால்இது உயிர் என அழைக்கப்படுகிறதுசந்திரன் பெறும்நட்சத்திரச் சாரமேஉடலின் இயக்கத் தொடர்புடன் இணைந்தஜென்ம நட்சத்திரமாகக்கருதப்படுகிறதுஇந்த ஜென்ம நட்சத்திரத்தை மட்டும் அடிபடையாகக் கொண்டுஇன்றையகோட்சாரத்தில் சந்திரன் பெறும் நட்சத்திரச் சாரத்தைக் கொண்டும்ஒரு ஆய்வைநம்பெரியவர்கள் செய்துள்ளனர்.    
முதலில் நம் ஜென்மநட்சத்திரம் எதுவென்று அறிந்துகொள்ளவேண்டும்அதேபோல் இன்றுசந்திரன் கோட்சாரத்தில் எந்த நட்சத்திரத்தில் உள்ளதுஎன்பதையும்தெரிந்துகொள்ளவேண்டும்இன்றைய ஜென்மநட்சத்திரம் முதல் கோட்சாரசந்திரன் நிற்கும் நட்சத்திரம் வரை எண்ணி வர,    எத்தனை நட்சத்திரம்   வருகிறதோஅதுவேபட்டியலில் கொடுத்துள்ள தாரபல நட்சத்திரமாகும்.

                                      இன்றைய நட்சத்திரம்.
ஜென்மசாரம்
கேதுநட்சத்திரம்
சுக்கிரன்நட்சத்திரம்
சூரியன்நட்சத்திரம்
சந்திரன்நட்சத்திரம்
செவ்வாய்நட்சத்திரம்
இராகுநட்சத்திரம்
குருநட்சத்திரம்
சனிநட்சத்திரம்
புதன்நட்சத்தி
கேது
     1
     2
    3
    4
   5
    6
    7
    8
   9
சுக்கிரன்
     9
     1
    2
    3
   4
    5
    6
    7
   8
சூரியன்
     8
     9
    1
    2
   3
    4
    5
    6
   7
சந்திரன்
     7
     8
     9
    1
   2
    3
    4
    5
   6
செவ்வாய்
     6
     7
    8
    9
   1
    2
    3
    4
   5

இராகு
     5
    6
    7
    8
   9
    1
     2
    3
   4
குரு
     4
    5
    6
    7
   8
    9
     1
    2
   3
சனி
     3
    4
    5
    6
   7
    8
     9
    1
   2
புதன்
     2
    3
   4
    5
   6
    7
     8
    9
   1

இப்போதுஉதாரணமாகஜென்மநட்சத்திரம் உத்ராடம் என்று வைத்துக் கொள்வோம்இந்தஉத்ராடம் சூரியனின் நட்சத்திரமாகும்இன்றைய கோட்சார சந்திரன் நிற்கும்  நட்சத்திரம்,குருவின் நட்சத்திரமான விசாகம் என்றால்,   இப்போதுகொடுத்துள்ள அட்டவணையில்இடமிருந்து வலமாக உள்ள பட்டியலில் சூரியன் என்று குறித்துள்ள கட்டத்திலிருந்து,மேலிருந்து கீழாக உள்ள கிரகவரிசையில் குரு எனும் கிரகம் இருக்கும் இடம்வரை விரலைநகர்த்தி வரஎண் “6” என்று குறிப்பிடப் பட்டிருக்கும்இந்த ஆறு என்ற எண்ணுக்குதாரபலப்பட்டியலைப் பார்க்கசாதகதாரை என வந்திருக்கும்.  
1.   ஜென்மத்தாரை _ ஒரே நட்சத்திர சாரம்நன்மை தராது.
2.   சம்பத்துத்தாரை _ பொருள் வரவு.
3.   விபத்து தாரை _ எதிர்பாராதக் கெட்ட  நிகழ்வுகள்
4.   ஷேமதாரை _  நலமானது
5.   பிரத்யக்தாரை _  மறைவுபிரிவு
6.   சாதகதாரை _ தான் விரும்பிய படி
7.   வதை தாரை _ தான் வருந்தும் படியாக,
8.   மைத்ர தாரை _ உயிரானவன் போல்,
9.   அதி மைத்ர தாரை _ தனக்கு உயிரைத் தருபவனைப் போல்
தன் ஜென்ம நட்சத்திரம் எந்த கிரகச்சாரம் பெற்றுள்ளதோஅந்த கிரகத்தின் மற்ற இருநட்சத்திரங்களும்ஜென்ம நட்சத்திரத்தின் மூன்றாவதுஐந்தாவதுஏழாவது நட்சத்திரங்களின்சார நாதன்களின் மற்ற நட்சத்திரங்களும்ஜாதகனுக்குப் பாதிப்பைத் தருகிறதுஜென்மநட்சத்திரத்திற்கு இரண்டுநான்குஆறுஎட்டுஒன்பது நட்சத்திரத்தின் அதிபதிகளின் மற்றஇரு நட்சத்திரங்களும்ஜாதகனுக்கு நன்மையைத் தருகின்றன.
 இப்போது உதாரணத்துக்கு எடுத்துக் கொண்ட சூரியனின் நட்சத்திரமான உத்ராடம்ஜாதகனின் ஜென்ம நட்சத்திரமாகும்சூரியனோட சாரம் பெற்ற மற்ற இரு நட்சத்திரங்களானகார்த்திகைஉத்திரத்தில் சந்திரன் கோட்சாரத்தில் சஞ்சரிக்கும் போதுஜாதகனுக்குஅலைச்சலைத் தருகிறதுஅதேபோல்ஜென்மநட்சத்திரத்தில் இருந்து மூன்றாவதுநட்சத்திரமானசெவ்வாயின் நட்சத்திரங்களானமி.சீரிடம்சித்திரைஅவிட்டம் முதலியநட்சத்திரங்களில் சந்திரன் கோட்சாரத்தில் சஞ்சரிக்கும் போதுஜாதகனுக்கு எதிர்பாராதக்கெட்ட நிகழ்வுகளைத் தரும்அதேபோல்ஜென்மநட்சத்திரத்திலிருந்து ஐந்தாவதுநட்சத்திரமானகுருவின் நட்சத்திரங்கள் மூன்றிலும் சந்திரன் கோட்சாத்தில் சஞ்சரிக்கும்போதுமறைவுஅல்லது பிரிவைத் தரும்மேலும்ஏழாம் நட்சத்திரமான புதனின்நட்சத்திரங்கள் மூன்றிலும்கோட்சாரத்தில் சந்திரன் சஞ்சரிக்கும்போதும்ஜாதகன்வருந்தும்படியான நிகழ்வுகள் ஏற்படும்
இதேபொல்ஜென்மநட்சத்திரத்திற்கு இரண்டாம்நான்காம்,,ஆறாம்எட்டுஒன்பதாம்நட்சத்திரங்களில் சந்திரன் சஞ்சரிக்கும் காலங்களில் ஜாதகனுக்கு நன்மையே ஏற்படுகிறது.ஆனால்இவையெல்லாம் பொதுப்பலன்களே.
நம்முடைய ஜாதகத்தில் கிரகங்கள் பெற்றுள்ள வலுவைப் பொறுத்தேசாரங்களும் வலுஉள்ளதாக அறியப்படும்எந்த பாவகத்தில் கிரகம் அமர்ந்துள்ளதோஅந்த பாவகமும்அதன்அதிபதியும் இலக்கினாதிபதிக்கு என்ன உறவாக உள்ளாரோ என்பதைப் பொறுத்தே,அக்கிரகம் நன்மையோதீமையோ செய்யும்கிரகங்களுக்கும்பாவகங்களுக்கும் உண்டானசுபாவகங்களைக் கொண்டே கிரகத்தின் பலத்தை நிர்ணயிக்கவேண்டும்.

No comments:

Post a Comment